Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Bookmarks
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

बाज़🦅 आ रहा है ~ सिलीगुड़ी WDP-4 20000 Series - Niraj Kumar

Full Site Search
  Full Site Search  
 
Tue Jan 26 18:16:01 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Topics
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Post PNRAdvanced Search
Large Station Board;
Entry# 1590769-0
Front Entrance - Outside; Large Station Board;
Entry# 3613713-0
Medium; Platform Pic; Large Station Board;
Entry# 3613713-0

NMJ/Nidamangalam Junction (3 PFs)
நீடாமங்கலம் சந்திப்பு     नीडामंगलम जंक्शन

Track: Single Electric-Line

Show ALL Trains
Jn Pt ( TVR, NGT, MQ) NH 67, Nidamangalam PIN 614404
State: Tamil Nadu


Zone: SR/Southern   Division: Tiruchchirappalli

No Recent News for NMJ/Nidamangalam Junction
Nearby Stations in the News
Type of Station: Junction
Number of Platforms: 3
Number of Halting Trains: 20
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Rating: 2.4/5 (47 votes)
cleanliness - average (6)
porters/escalators - poor (5)
food - average (6)
transportation - good (6)
lodging - poor (6)
railfanning - average (6)
sightseeing - average (6)
safety - average (6)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 18 of 18 News Items  
Dec 06 2019 (15:29) போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நீடாமங்கலத்தில் கீழ்ப்பாலம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை (www.dailythanthi.com)
0 Followers
9833 views

News Entry# 396237  Blog Entry# 4506625   
  Past Edits
Dec 06 2019 (15:30)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Dec 06 2019 (15:30)
Station Tag: Nidamangalam Junction/NMJ added by Kamban Express~/1069947
நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கீழ்ப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதிவு: டிசம்பர் 06, 201904:30 AM
நீடாமங்கலம்,
நீடாமங்கலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. அதேபோல மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. ஆதலால் நீடாமங்கலத்திற்கு தினமும் எண்ணற்ற பேர் வருகின்றனர். நீடாமங்கலம் நகர் பகுதியில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
...
more...



கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் தினமும் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
அரசு - தனியார் பஸ்
இதேபோல் அதிராம்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் இருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கும் நாள்தோறும் ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன.
காரைக்கால், நாகை, திருவாரூர், நீடாமங்கலம் வழியாக தஞ்சை, திருச்சி வரையிலான பயணிகள் ரெயில்களும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக மானாமதுரைக்கு பயணிகள் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு நீடாமங்கலம் வழியாக பயணிகள் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக சென்னைக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக கோவைக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலும், காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், நீடாமங்கலம் வழியாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் தினமும் சென்று வருகின்றன.
எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
இவை தவிர மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக திருப்பதிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக ஜோத்பூருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும், காரைக்கால் வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரெயிலும் நீடாமங்கலம் வழியாக தான் சென்று வருகின்றன.
காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றிய சரக்கு ரெயில் நீடாமங்கலம் வழியாக தூத்துக்குடிக்கும், தூத்துக்குடியில் இருந்து நீடாமங்கலத்திற்கும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து உரம் ஏற்றிச்செல்லும் சரக்கு ரெயில் என தினமும் எண்ணற்ற ரெயில்கள் நீடாமங்கலம் வழியாக இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெருக்கடி
நீடாமங்கலம் வழியாக தினமும் எண்ணற்ற ரெயில்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுகிறது. ஆதலால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக நீடாமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் ரெயில்வே கேட், தஞ்சை சாலையில் ஒரத்தூர் ரெயில்வேகேட், ஆதனூர் ரெயில்வேகேட், நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில் கப்பலுடையான் ரெயில்வே கேட் என 4 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் செல்லும் நேரங்களில் இந்த ரெயில்வே கேட்டுகள் மூடப்படுகின்றன. ரெயில்வே கேட்டுகள் மூடப்படும் போதெல்லாம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
புறவழிச்சாலை திட்டம்
சில சமயங்களில் நீண்ட நேரம் ரெயில்வே கேட் மூடப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நீடாமங்கலம் புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் திருச்சி முதல் நாகை வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தினால் புறவழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டது. நான்கு வழிச்சாலை திட்டமும் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை நிறைவேற்றப்பட்டது.
பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக 4 வழிச்சாலை திட்டம் இரண்டு வழிச்சாலை திட்டமாக அறிவிக்கப்பட்டு அந்த பணியும் பல்வேறு காரணங்களால் தற்போது வரை சரிவர நிறைவேறாமல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கினார். அதனைத்தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கான மதிப்பீட்டை தயாரித்து மேம்பாலம் அமைவதற்கான வரை படத்தையும் தயாரித்தனர். ரெயில்வே உயர் அதிகாரிகளும், தமிழக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களும் வரைபடத்தை கொண்டு மேம்பாலம் அமைய வாய்ப்புள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
கீழ்ப்பாலம்
அப்போது மேம்பாலம் அமைய சில ஆண்டுகள் ஆகும். ஆதலால் உடனடியாக ரெயில்வே கீழ்ப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ரெயில்வே உயர் அதிகாரிகள் கூறினர். அந்த பணியும் இதுவரை நடைபெறவில்லை.
எனவே நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாக ரெயில்வே கீழ்ப்பாலம் அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.
Jun 28 2019 (21:14) Probe begins into stone placed on railway track at Needamangalam (www.thehindu.com)
Crime/Accidents
SR/Southern
0 Followers
8647 views

News Entry# 385418  Blog Entry# 4354477   
  Past Edits
Jun 28 2019 (21:14)
Station Tag: Nidamangalam Junction/NMJ added by 12649⭐️ KSK ⭐️12650^~/1203948

Jun 28 2019 (21:14)
Train Tag: Chemmozhi Express/16615 added by 12649⭐️ KSK ⭐️12650^~/1203948
Stations:  Nidamangalam Junction/NMJ  
The Government Railway Police (GRP) has launched an investigation after a broken cement slab stone was found on the railway track at Needamangalam railway station in Tiruvarur district on Thursday night.
The incident led to the delayed departure of Mannargudi-Coimbatore Semmozhi Express from the station.
GRP sources said the cement slab stone was placed a few metres away from the station towards the Tiruvarur end of the track. Measuring about a foot in length and three inch thickness, it was noticed by an alert Loco Pilot, who was shunting the diesel
...
more...
locomotive of Semmozhi Express to switch its direction towards Coimbatore.
Upon noticing the cement slab, the Loco Pilot immediately stopped and alerted station officials through walkie-talkie around 8.45 p.m. The duty point man and other personnel removed the slab from the spot. There was no damage to the point or to the track, said GRP sources.
The matter was conveyed to Tiruchi Railway Divisional Control Room from where it was relayed to Thanjavur Railway Police, the sources said. Due to the incident, Semmozhi Express was detained at the station for about 15 minutes and left after 9 p.m.
Field-level officers of the Railway Protection Force (RPF) and GRP arrived at the spot and conducted inquiry. Divisional Security Commissioner, RPF, Tiruchi M.F. Mohideen and the Deputy Superintendent of Police, Railway Police, Tiruchi, inspected the location late on Thursday.
A detective dog belonging to RPF’s Dog Squad was brought to the scene. The broken slab was later taken into possession by GRP, Thanjavur, as part of the investigation.
GRP sources said a case under Section 151 of the Railways Act, 1989, was registered by GRP, Thanjavur, with the identity of the accused yet to be established. A crime team of the GRP from Tiruchi was also being involved in the probe, an officer said.
RPF sources said instructions had been given to their field-level personnel to mount surveillance of the station.
Mar 23 2019 (12:32) மன்னார்குடி-காரைக்கால் இடையே பயணிகள் ரயில் இயக்க வேண்டும் ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் (www.dinakaran.com)
0 Followers
27349 views

News Entry# 379273  Blog Entry# 4269836   
  Past Edits
Mar 23 2019 (12:32)
Station Tag: Karaikal/KIK added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Nagore/NCR added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Velankanni/VLNK added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Nagappattinam Junction/NGT added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Kizhvelur/KVL added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Nidamangalam Junction/NMJ added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Mannargudi/MQ added by Kamban Express~/1069947
மன்னார்குடி, மார்ச் 22: மன்னார்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் செம்மொழி விரைவு ரயிலை பகல் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக மன்னார்குடி-காரைக்கால் இடையே இயக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் இருந்து மன்னை வரும் வண்டி எண் 16616 செம்மொழி விரைவு ரயில் காலை 7.40 மணி அளவில் மன்னார்குடி ரயில் நிலையம் வந்துசேரும். அங்கேயே அது காலி வண்டியாக நிறுத்தி வைக்கப்பட்டு இரவு 8.15 மணி அளவில் மீண்டும் புறப்பட்டு கோவை சென்றடையும். 12 மணி நேரம் ரயில் வேக்கு எந்த வருவாயும் இல்லாமல் வீணாக இந்த வண்டி நிறுத்தி வைக்கப்படுகிறது. மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர் பகுதியில் இருந்து நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா திருத்தலம், திருநள்ளாறு சனிஸ்வரன் கோயில் போன்ற புனித ஸ்தலங்களுக்கு மக்கள் காலையில் செல்வதற்கும், தரிசனம் முடிந்து மாலையில் ஊர் திரும்பி வருவதற்கும் ஏதுவாக ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட
...
more...
நாள் எதிர்பார்ப்பு.
அதற்கு இந்த செம்மொழி ரயிலின் காலி வண்டியை காலை 9 மணி அளவில் மன்னார்குடியில் இருந்து காரைக்கால் வரையிலும், மறு மார்க்கத்தில் மாலை 4 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு மன்னார்குடி வந்தடையும் வகையில் இயக்கினால் திருவாரூர் மாவட்ட மக்களின் தேவைக்கு கூடுதல் ரயில் சேவையாகவும், திருத்தலங்கள் செல்லும் பக்தர்களுக்கும் உதவியாகவும் இருக்கும். ரயில்வே துறைக்கும் கூடுதல் வருவாயும் கிடைக்கும். இது குறித்து ரயில்வே அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் சார்பாக ஏற்கனவே பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே ரயில்வே நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி செம்மொழி காலி வண்டியைக் கொண்டு மன்னார்குடியில் இருந்து பகல் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக மன்னார்குடி-காரைக்கால் இடையே ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Oct 24 2018 (20:10) ரெயில்வே பாலத்தில் ஆபத்தான பயணம் வெண்ணாற்றில் பாலம் கட்டப்படுமா? 40 ஆண்டு கால கனவு நனவாகுமா? (www.dailythanthi.com)
Major Accidents/Disruptions
SR/Southern
0 Followers
10616 views

News Entry# 366358  Blog Entry# 3934995   
  Past Edits
Oct 24 2018 (20:10)
Station Tag: Koradacheri/KDE added by Kamban Express~/1069947

Oct 24 2018 (20:10)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Oct 24 2018 (20:10)
Station Tag: Nidamangalam Junction/NMJ added by Kamban Express~/1069947
நீடாமங்கலம் அருகே ரெயில்வே பாலத்தில் கிராம மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். வெண்ணாற்றில் பாலம் கட்ட வேண்டும் என்பது கிராம மக்களின் கனவாக உள்ளது. இந்த கனவு நனவாகுமா? என்ற கேள்விக்கு அதிகாரிகள்தான் விடை அளிக்க வேண்டும்.
பதிவு: அக்டோபர் 24,  2018 04:00 AM
நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழைய நீடாமங்கலம் கிராமம் உள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தின் வழியாக வெண்ணாறு செல்கிறது. வெண்ணாற்றின் குறுக்கே நீடாமங்கலம்-திருவாரூர் வழித்தடத்தில் ரெயில்வே பாலம் கட்டப்பட்டு உள்ளது.
...
more...
அதன் அருகே தஞ்சை-நாகை நெடுஞ்சாலையின் குறுக்காக வையகளத்தூர் ரெயில்வே கேட் உள்ளது.
வையகளத்தூர், ஒளிமதி, கப்பலுடையான், அன்பிற்குடையான், அரவூர், அரவத்தூர், கிளியூர், குச்சுப்பாளையம், மாணிக்கமங்கலம், அரசமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள், நீடாமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து வருகிறார்கள்.
இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல நாள்தோறும் ரெயில்வே பாலத்தை கடந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ரெயில்வே பாலத்தை நடந்தபடியும், சைக்கிளிலும் கடந்து செல்லும் மாணவ, மாணவிகளிடம் எப்போது ரெயில் வருமோ? என்ற அச்சம் இருப்பதை உணர முடிகிறது. அதேபோல் மளிகை கடைகள், மருத்துவமனைகளுக்கு செல்லவும் கிராம மக்கள் ரெயில்வே பாலத்தையே பயன்படுத்துகின்றனர்.
நெடுஞ்சாலை வழியாக நீடாமங்கலம் வர கூடுதல் நேரமாகும் என்பதால், வெண்ணாற்றில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே பாலம் கிராம மக்களுடைய அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விட்டது. பெரும்பாலும் சைக்கிளில் செல்பவர்களும், பாதசாரிகளும் இந்த ரெயில்வே பாலத்தை நீடாமங்கலம் நகருக்கு வர குறுக்கு வழிப்பாதையாக பயன்படுத்துகின்றனர். மோட்டார் சைக்கிள், கார் வைத்திருப்பவர்கள் மட்டுமே நீடாமங்கலத்துக்கு நெடுஞ்சாலை வழியாக செல்கிறார்கள்.
ரெயில்வே பாலத்தில் கிராம மக்களின் திக்...திக்... பயணம் கடந்த 40 ஆண்டுகளாக நீண்டு கொண்டே செல்கிறது. ஆபத்தை தவிர்க்க பழைய நீடாமங்கலத்தையும், வையகளத்தூர் நெடுஞ்சாலை பகுதியையும் இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே பொதுமக்களின் போக்குவரத்துக்காக பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
ரெயில்வே பாலத்தின் அருகே வெண்ணாற்றின் குறுக்கே மக்கள் பயன்பாட்டுக்காக சிமெண்டு பாலம் கட்டினால் ரெயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வு காரணமாக பாலம் பழுதடைந்து விடும் என காரணம் காட்டி பாலம் கட்டுவதை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தட்டிக்கழித்து வருகிறார்கள்.
ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மூங்கில் பாலமும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. பெருகி வரும் மக்கள் தொகையையும், போக்குவரத்து நெருக்கடியையும், ஆபத்தான பயணத்தையும் கருத்தில் கொண்டு வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பு.
வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டி, கிராம மக் களின் கனவை நனவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதற்கு அதிகாரிகள்தான் விடை அளிக்க வேண்டும்.
Oct 24 2018 (00:55) நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி (www.dinamani.com)
Crime/Accidents
SR/Southern
0 Followers
7428 views

News Entry# 366233  Blog Entry# 3932537   
  Past Edits
Oct 24 2018 (00:55)
Station Tag: Nidamangalam Junction/NMJ added by Kamban Express~/1069947
Stations:  Nidamangalam Junction/NMJ  
நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி
Page#    Showing 1 to 18 of 18 News Items  

Go to Full Mobile site