Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Bookmarks
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

There is no more pure joy than RailFanning.

Full Site Search
  Full Site Search  
 
Mon Jan 25 10:54:17 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Topics
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Post PNRAdvanced Search
Large Station Board;
Entry# 585902-0
Large Station Board;
Entry# 1642415-0
Medium; Platform Pic; Large Station Board;
Entry# 4524420-0

SVKS/Sivakasi (2 PFs)
சிவகாசி     शिवकाशी

Track: Single Diesel-Line

Show ALL Trains
Velayutham Rd, Sivakasi-626123, Ph No: 04562 - 220001
State: Tamil Nadu


Zone: SR/Southern   Division: Madurai

No Recent News for SVKS/Sivakasi
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 12
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Rating: 3.2/5 (27 votes)
cleanliness - good (3)
porters/escalators - average (3)
food - good (4)
transportation - poor (3)
lodging - average (3)
railfanning - good (4)
sightseeing - good (3)
safety - good (4)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 8 of 8 News Items  
Dec 31 2018 (23:13) தாம்பரம்-கொல்லம் ரயிலை தினசரி இயக்க வேண்டும் பயணிகள் வலியுறுத்தல் (www.dinakaran.com)
New/Special Trains
SR/Southern
0 Followers
25889 views

News Entry# 372841  Blog Entry# 4179005   
  Past Edits
Dec 31 2018 (23:13)
Station Tag: Manamadurai Junction/MNM added by Kamban Express~/1069947

Dec 31 2018 (23:13)
Station Tag: Aruppukkottai/APK added by Kamban Express~/1069947

Dec 31 2018 (23:13)
Station Tag: Sivakasi/SVKS added by Kamban Express~/1069947

Dec 31 2018 (23:13)
Station Tag: Virudunagar Junction/VPT added by Kamban Express~/1069947

Dec 31 2018 (23:13)
Station Tag: Sengottai/SCT added by Kamban Express~/1069947

Dec 31 2018 (23:13)
Station Tag: Kollam Junction (Quilon)/QLN added by Kamban Express~/1069947
சிவகாசி, டிச.28: தாம்பரம்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளதால் தினசரி இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தாம்பரத்தில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு கொல்லத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறு மார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து செவ்வாய், வியாழன் மாலை 3 மணிக்கு சென்னை தாம்பரத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 18 ஆண்டுகளுக்கு பின் கொல்லத்திற்கு ரயில் இயக்கப்படுவதால் கேரளா, தமிழக பயணிகளிடம் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இந்த ரயில் இயக்கப்படுவதால் பயிணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. கேரளாவில் இருந்து அதிகமான பயணிகள் இந்த ரயிலில் பயணிப்பதால் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை பயணிகளுக்கு இந்த ரயிலில் பயணிப்பதற்கு இருக்கை வசதி கிடைப்பதில்லை. தற்போது கொல்லம் வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொல்லத்திற்கு தினசரி ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் தாம்பரம் ரயில் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருவதால் கேரளா மாநிலம் சுற்றுலா செல்லும் பயணிகளும் அதிகளவில் ரயில் பயணித்து வருகின்றனர்.
...
more...
ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களும் அதிக அளவில் இந்த ரயிலில் பயணிக்கின்றனர். எனவே தாம்பரம்-கொல்லம் ரயிலை பயணிகள் வசதி கருதி தினசரி ரயிலாக இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலை கொல்லம் வரை நீடிக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Apr 23 2017 (09:45) சிவகாசி ரயில் நிலையத்தில் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு: பயணிகள் (m.dinakaran.com)
Major Accidents/Disruptions
SR/Southern

News Entry# 300472   
  Past Edits
Apr 23 2017 (09:45)
Station Tag: Sivakasi/SVKS added by sGs*^~/41440
Stations:  Sivakasi/SVKS  
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் மின் விளக்குகள் சரிவர எரியாததால், ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோத செயல்களும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரயில் நிலையம் வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், சுவிதா எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை பயணிகள் ரயில் ஆகியவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் இரண்டு பிளாட்பாரங்கள் உள்ளன.

அதிக
...
more...
ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படாததால், பெரும்பாலும் சிவகாசி வரும் ரயில்கள் முதலாவது பிளாட்பாரத்தில் நின்று செல்லும்.
இரண்டாவது பிளாட்பாரத்தில் ரயில் (கோச் எண்) தகவல் பலகை இல்லை. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதல் பிளாட்பாரத்தில் மட்டுமே நின்று செல்கிறது. சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் காலை 5 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் இரவு 8.35 மணிக்கும் சிவகாசி ரயில் நிலையம் வந்து செல்கிறது. இந்த ரயிலில் சிவகாசியில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்தநிலையில், சிவகாசி ரயில் நிலையம் பிளாட்பார்ங்களில் உள்ள மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை என பயணிகள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இரவில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகள் கோச் எண் தகவல் பலகையை கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ரயில் நிலையத்தில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரியாததால் ரயில் நிலையம் இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் பயணிகளிடம் செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.
மேலும், சிவகாசி ரயில் நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததால் ரயில் நிலையத்திற்கு இரவில் வரும் பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பிளாட்பாரங்களில் அமர்ந்து கொண்டு மது குடிப்பது, கஞ்சா விற்பனை செய்வது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘‘ ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் சரிவர ஈடுபடாததால் இது போன்ற சமூக விரோத செயல்கள் நடக்கிறது. சிவகாசி ரயில் நிலையம் அரசு மருத்துவமனையை ஒட்டி அமைந்துள்ளது.
மருத்துவமனை வளாக பகுதி வழியாக சமூக விரோதிகள் ரயில் நிலையத்திற்குள் புகுந்து விடுகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் சிவகாசி ரயில் நிலையம் வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பயணிகளின் அச்சத்தை போக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Mar 31 2017 (10:35) சிலம்பு விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை (m.dailyhunt.in)
Other News

News Entry# 298181   
  Past Edits
Mar 31 2017 (10:35)
Station Tag: Sivakasi/SVKS added by podhigai charal~/951131

Mar 31 2017 (10:35)
Station Tag: Sengottai/SCT added by podhigai charal~/951131

Mar 31 2017 (10:35)
Station Tag: Virudunagar Junction/VPT added by podhigai charal~/951131

Mar 31 2017 (10:35)
Train Tag: Silambu Express/16182 added by podhigai charal~/951131

Mar 31 2017 (10:35)
Train Tag: Silambu Express/16181 added by podhigai charal~/951131
சிலம்பு விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் வழியாக செங்கோட்டை-சென்னை பொதிகை அதிவிரைவு ரயில் 24 பெட்டிகளுடன் இயங்குகிறது. தற்போது கூடுதலாக, சென்னை-மானாமதுரை இடையே வாரம் இருமுறை இயங்கிய சிலம்பு விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிலம்பு ரயில் கட்டணம் பொதிகையை விட குறைவு. மேலும் முதல் வகுப்பு இருக்கை வசதியும் உள்ளது. இதனால் இந்த ரயில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இதில் போதுமான படுக்கை வசதி பெட்டிகள் இல்லை. செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டாலும், இந்த ரயிலில் திருநெல்வேலி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு முன்பதிவு ஒதுக்கீடும் இல்லை.
எனவே
...
more...
சிலம்பு விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளை கூடுதலாகவும், முன்பதிவில்லா பெட்டிகள் இரண்டும் இணைக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், நியூ ஆரியங்காவு-இடமண் இடையே நடைபெறும் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்து கொல்லம்-ராஜபாளையம்-மதுரை வழித்தடத்தில் ரயில் இயக்கவும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Feb 25 2016 (17:18) தென் மாவட்ட மக்களை ஏமாற்றிய ரயில்வே பட்ஜெட் (tamil.oneindia.com)
Rail Budget
SR/Southern
0 Followers
7756 views

News Entry# 258877  Blog Entry# 1749383   
  Past Edits
Feb 25 2016 (5:18PM)
Station Tag: Tenkasi Junction/TSI added by emailconnect2hari/1069947

Feb 25 2016 (5:18PM)
Station Tag: Tirunelveli Junction/TEN added by emailconnect2hari/1069947

Feb 25 2016 (5:18PM)
Station Tag: Sivakasi/SVKS added by emailconnect2hari/1069947

Feb 25 2016 (5:18PM)
Station Tag: Punalur/PUU added by emailconnect2hari/1069947

Feb 25 2016 (5:18PM)
Station Tag: Sengottai/SCT added by emailconnect2hari/1069947
நெல்லை: இந்திய ரயில்வேயில் வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் ஓன்று செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை ஆகும். இந்த பாதையில் செங்கோட்டை முதல் புனலூர் வரை அகல ரயில் பாதையாக மாற்றிட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து கடந்த 19-10-2010ல் ரயில் போக்குவரத்தை நிறுத்தியது. அன்றைய தினம் இருமாநில எல்லைகளில் இந்த ரயிலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திய பல்லாயிரக்கணக்கானோர் துயரத்துடன் இந்த ரயிலில் கடைசி பயணம் செய்து பிரியாவிடை கொடுத்தனர். 51 கி.மீ நீளமுள்ள இந்த தடத்தில் 2013ம் ஆண்டுக்குள் செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டு விடும் என்றும் ஒப்பந்த பணிகள் முடிந்து வேலைகள் தொடங்கியதாகவும் தெரிவித்தது ரயில்வே. ஆனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 60 மாதங்கள் கடந்ததுதான் மிச்சம் 50சதவிகிதப் பணிகள் மட்டுமே தொடங்கி முடிக்கப்பட்டுள்ளன. 110 ஆண்டுகால வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதையில் புனலூர்-கொல்லம் இடையே பணிகள் முடிக்கப்பட்டு அகல ரயில் பாதையில் கடந்த 7ஆண்டுகாலமாக ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மிகவும் சவாலான பாதையாக இருக்கும் செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணி விரைந்து முடிக்கப்பட்டால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். கேரளாவில் இருந்து வடக்கு நோக்கியும், தென் கிழக்கு நோக்கியும் செல்லும் ரயில்கள் தற்போது கூடுதல் தொலைவை சுற்றிச் செல்கின்றன. இதனால் ரயில்வேக்கு கூடுதல் செலவு பிடிக்கிறது. இந்த ரயில்பாதை அமைக்கப்பட்டால், இந்த செலவு மிச்சமாகும். அதுமட்டுமின்றி,...
more...
சென்னை, பெங்களுரு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கேரள மாநிலம் திருவனந்த புரம், கொல்லம், குருவாயூர், எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த வழித்தடம் நேரத்தை மிச்சப்படுத்த உதவியாக இருக்கும். செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மக்களுக்கும் இந்த திட்டத்தால் பலன் கிடைக்கும். இதனால் இருமாநில எல்லையோர மக்களுக்கும் வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் குறைவான அளவே மக்களவை உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்கள் தங்கள் மாநில ரயில்வே திட்டங்களை போராடி பெறுவதில் வெற்றி பெறுகிறார்கள். கேரள மாநில மக்களவை உறுப்பினர்களின் நெருக்கடியைத் தொடர்ந்து கடந்த சிலதினங்களாக தென்னக ரயில்வேயின் தலைமை கட்டுமானபிரிவு பொறியாளர் மிஸ்ரா தென்மலை, ஆரியங்காவு, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை திட்ட பணிகளை வேகப்படுத்தி வருகிறார். கொல்லம் முதல் சிவகாசி வரையுள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தென்னக ரயில்வே பணிகளை துரிதப்படுத்த நம் எம்.பிக்கள் குரல் எழுப்புவார்களா..? இன்றைய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இந்த தடத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா..? என்ற எதிர்ப்பார்ப்புக்களை ஏற்ப்படுத்திய ரயில்வே பட்ஜெட் தென்மாவட்ட மக்களை ஏமாற்றியுள்ளது, என்றே ரயில் பயணிகள் கூறுகின்றனர்.
Read more at: click here


Feb 15 2016 (10:06) தரைப்பாலம் அமைக்கும் பணியால் பொதிகை எக்ஸ்பிரஸ் 1¼ மணி நேரம் தாமதம் (www.dailythanthi.com)
Other News
SR/Southern

News Entry# 257339   
  Past Edits
Feb 15 2016 (10:06AM)
Station Tag: Sivakasi/SVKS added by emailconnect2hari/1069947
Stations:  Sivakasi/SVKS  
சிவகாசி
தரைப்பாலம் அமைக்கும் பணியால் சிவகாசி ரெயில் நிலையத்தில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் 1¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாலம் பணி
சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 6.40 மணிக்கு சிவகாசி ரெயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். உடனடியாக 2 நிமிடங்களில் அங்கிருந்து ரெயில் கிளம்பி விடும்.
நேற்று
...
more...
பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்துக்கு காலை 6.50–க்கு வந்து சேர்ந்தது. ஆனால் வெகு நேரமாகியும் அங்கிருந்து ரெயில் புறப்பட வில்லை.
இதனால் பயணிகள் அங்குள்ள அதிகாரிகளிடம் சென்று தாமதத்திற்கான காரணம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் இன்னும் சற்று நேரத்தில் புறப்படும் என்று மட்டும் கூறியுள்ளனர். ஆனால் 1 மணி நேரம் ஆகியும் ரெயில் புறப்படாததால் பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
1¼ மணி நேரம் தாமதம்
அப்போது அங்கிருந்த போலீசார், அருகில் உள்ள அய்யம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றும், வேலை முடிந்ததும், அங்கிருந்து தகவல் கிடைத்த பிறகுதான் ரெயில் புறப்படும் என்று கூறினார்.
இறுதியில் சுமார் 1¼ மணி நேரம் தாமதமாக 8.20 மணிக்கு ரெயில் கிளம்பிச் சென்றது. இதனால் அந்த ரெயில் இருந்த பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
இந்த ரெயில் தாமதம் ஆனால் அந்த பாதை வழியாக வரும் மதுரை–செங்கோட்டை மற்றும் செங்கோட்டை–மதுரை பயணிகள் ரயில்களும் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
Page#    Showing 1 to 8 of 8 News Items  

Go to Full Mobile site